search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் மரணம்"

    விக்கிரவாண்டி அருகே வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விக்கிரவாண்டி:

    விக்கிரவாண்டி அருகே உள்ள வா.பகண்டை பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் ஜீவித் (வயது 4). நேற்று முன்தினம் மாலை வீட்டின் முன்பு அக்கம் பக்கத்தில் உள்ள சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த ஜீவித் திடீரென மாயமானான். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுபற்றி விக்கிரவாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததோடு, மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த விக்கிரவாண்டி தாசில்தார் இளவரசன், சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் ஆகியோர் தலைமையிலான மீட்பு குழுவினர் மற்றும் அக்கிராம இளைஞர்கள் வ.பகண்டையில் உள்ள நீர்நிலைகளில் இறங்கி சிறுவனை தேடினர்.

    அப்போது வாதானூரான் வாய்க்காலில் பிணமாக கிடந்த சிறுவனின் உடலை மீட்டனர். ஜீவித் விளையாடியபோது வாய்க்காலுக்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதனிடையே செல்வமணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சுவாமிமலை அருகே சிறுவன் மர்மமான முறையில் பலியான சம்பவம் குறித்து அவரது தந்தை உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சுவாமிமலை:

    சுவாமிமலையை அடுத்த திம்மக்குடியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது42) கொத்தனார். இவரது மனைவி சுபஸ்ரீ (38). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அபிஷேக் (வயது 5) என்ற மகன் இருந்தான்.

    இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சுபஸ்ரீ வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி அறிந்த கார்த்தி தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே அபிஷேக் நேற்று முன்தினம் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டான். அவனை மீட்டு உறவினர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அபிஷேக் உடலில் வி‌ஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவனை தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் அவன் நேற்று காலை பரிதாபமாக இறந்தான்.

    இதுப்பற்றிய புகாரின் பேரின் சுவாமிமலைப் போலீசார் சிறுவனின் தந்தை கார்த்தி மற்றும் உறவினர்கள் கேசவன், பிரேமா, ஸ்ரீதர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.
    சுவாமிமலை அருகே சிறுவன் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுவாமிமலை:

    சுவாமிமலையை அடுத்த திம்மக்குடியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது42) கொத்தனார். இவரது மனைவி சுபஸ்ரீ (38) இவர்களுக்கு அபிஷேக் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி சுபஸ்ரீ அவரது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அறிந்த கார்த்தி தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே அபிஷேக் நேற்று கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டான் அவனை மீட்டு உறவினர்கள் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது அபிஷேக் உடலில் வி‌ஷம் கலந்திருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவனை தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சைப் பலன் அளிக்காமல் அவன் இன்று காலை பரிதாபமாக இறந்தான்.

    இதுப்பற்றிய புகாரின் பேரின் சுவாமிமலைப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மெக்சிகோ எல்லையில் உள்ள அமெரிக்காவின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகளில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான். #MigrantBoyDies #MexicoUSBorder
    வாஷிங்டன்:

    மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் குறிப்பாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் எல்சால்வடார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே அதிக அளவில் நுழைகின்றனர்.

    இதை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக உள்ளார். தடையை மீறி அமெரிக்காவினுள் நுழையும் மத்திய அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுகிறார்கள். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட ஏற்பாடும் நடைபெறுகிறது.



    இந்நிலையில் அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த  கவுதமாலாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளான். இத்தகவலை அமெரிக்காவின் குடியேற்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்த சிறுவன் பெயர் பெலிப் அலோன்சோ-கோமஸ் என்றும், இந்த உயிரிழப்பு தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் டெக்சாஸ் எம்பி ஜோவாகின் கேஸ்ட்ரோ வலியுறுத்தி உள்ளார்.

    மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லைக்குள் நுழைந்ததாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அகதிகளின் குழந்தை உயிரிழப்பது இந்த மாதத்தில் இது இரண்டாவது சம்பவமாகும். இதற்கு முன்பு அதே கவுதமாலாவை சேர்ந்த ஏழு வயது சிறுமி அமெரிக்க அரசின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #MigrantBoyDies #MexicoUSBorder

    கொருக்குப்பேட்டையில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சமபவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராயபுரம்:

    கொருக்குப்பேட்டை அம்பேத்கார் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் செரீப். கூலி தொழிலாளி. இவருடைய மகன் ரியாஸ் (10). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தான்.

    நேற்று இரவு செரீப் வீட்டில் மின்சாரம் இல்லை. எனவே அருகில் உள்ள வீட்டில் இருந்து வயர் மூலம் மின்சாரம் எடுத்து இருந்தனர்.

    இன்று காலை சிறுவன் ரியாஸ் வீட்டில் இருந்த தனது சைக்கிளை எடுத்தாள். அப்போது பக்கத்து வீட்டில் இருந்து வந்த மின்சார வயரில் எதிர்பாராத விதமாக கைப்பட்டதால் மின்சாரம் தாக்கியது.

    சிறுவன் ரியாஸ் அலறியபடியே கீழே விழுந்தான். சத்தம் கேட்டு அவனை காப்பாற்ற முயன்ற ரியாசின் தாயாருக்கும் காயம் ஏற்பட்டது.

    மின்சாரம் தாக்கிய சிறுவன் ரியாசை, ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ரியாஸ் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. ஆர்.கே.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    கேளம்பாக்கத்தில் லாரி மோதி சிறுவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accidentcase

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரவி. தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மினி. இவர்களது 4-வது மகன் செவன் ரித்விக். அங்குள்ள மழலையர் பள்ளியில் படித்து வந்தான். மகனை பள்ளியில் விடுவதற்காக் பத்மினி மற்றும் அவரது தந்தை தியாகராஜன் ஆகியோர் இன்று காலை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றனர்.

    வீடு அருகே உள்ள சிக்னலில் திரும்புவதற்காக நின்றபோது பின்னால் வந்த மண் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சிறுவன் ரித்விக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். மற்ற இருவரும் படுகாயம் அடைந்தனர். ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இதுகுறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×